*****மழையுடன் என் கண்ணீரும்*****
அருவியின் சலசலப்பில்
குருவியின் கலகலப்பில்
மறந்திருந்தேன் என்னை நான்!
பிறந்திருந்தேன் புதிதாய் நான்!
கண்ணில் பெருகிய
கண்ணீர் துடைத்து
அண்ணாந்து பார்த்தேன்!
வானம் கூட - என்
மனம் போல் இருட்டியது
சில்லென்று குளிர் காற்றிடைச்
சிலிர்த்திட்டது என் மேனி! வானமோ
சோவென்று மழை கொண்டு
சோகமாய் அழுது விட
கோபமாய் இடியோ
சாபமிட்டுக் கொட்டித் தீர்த்தது!
என் மேனி எங்கும்
வானத்தின் அழுகை!
எனக்கும் வானத்துக்கும்
ஒரே எண்ணம்!
வானத்தைப் பார்த்து
மனதிடை தோன்றிய கேள்வியை
வினவிட்டேன் துணிந்து!
வானமே! உனக்கென்ன கவலை?
வானமோ குமுறிய அழுகையுடன்
சொன்னது பதிலொன்று!
எனக்குத் தான் யாரும் இல்லையே!
பகலவனும் இரவலனும்
எனக்கென்றே நினைத்திருந்தேன் – அவர்களோ
கணப்பொழுதில் சென்றனர்!
தனிமையால் வாடுகின்றேன்!
சோகமாய் அழுகின்றேன்
சோவென்று மழை கொண்டு - என்று
சொன்னதொரு பதிலொன்று!
ஒன்று மட்டும்
தோன்றியது என் நெஞ்சில்!
எல்லாம் கொண்ட இயற்கை கூட
இல்லாமை கண்டிங்கே வாடும் போது
இல்லை என்றே சொல்லும்
இந்த மனிதர் குலம்
மகிழ்வதெப்போ?
மழையுடன் என் கண்ணீரும்
எல்லாமே தண்ணீராய் - இதனிடை
என் அழுகையும்
வானின் அழுகையும்
யாருக்கிங்கே தெரிந்திடும்?
பாருக்கெங்கே புரிந்திடும்?
-------------------------------------------------------------------------------------
*****மரிக்காத உன் நினைவு*****
தொலைப்பதும்
மறுப்பதும் ..
தூக்கம் இழப்பதும்
மரிக்காத உன் ..
நினைவுகளால்
மட்டுமே...!!
தொலைத்ததை
தேடுபவர்களில்
நானும் ஒருத்தி..
இன்றுவரை தேடுகிறேன்
உன்னோடு என்னையும் ..!!!
முகவரி தொலைந்த
இந்த ஏழைக்கு முகவரி
கொடுத்து விடு..!!
ஒரு முறையேனும்
பூமி பின்னோக்கி
சுழறாத என்ற ஏக்கம்
ஒரு பிரமை ..
நம் சந்திப்பின்
நிமிடங்களை பார்க்க
தவிக்கும் மனதுடன் ..!!
நாம் சந்தித்த
நிமிடங்களில்
பேசும் உன் விழிகளின்
புரியாத ஓவியம்
கண்டேன் ..ஆனால்
அதன் அர்த்தம்
அறிந்திருக்கவில்லை ..
இன்று அறியும் ஆவல்..!!
தீர்ந்துவிட்டது
உன் வார்த்தை
தீராத கண்ணீரை
கொடுத்துவிட்டு...!!!
உறவுகள் பல
இருந்தும் ..இன்று
வெறுமையை உணர்த்தும்
உன் பிரி(வு)யம் .!!!
-------------------------------------------------------------------------------------
*****கவிதை வருமென*****
கவனமாக
காத்திருக்கிறேன்
எப்பொழுது
கவிதை வருமென
ஈரக்காற்றை உள்ளிழுத்து
வெளிவிடும் போதும்
கண்களை சிமிட்டும்
போதும்
இசையொலிகளின்
மோதலின் போதும்
ஒவ்வொரு மெல்லிய
அசைவின் போதும்
காத்திருக்கிறேன்
கவிதை வருமென
-------------------------------------------------------------------------------------
*****அழகு*****
அந்திமாலை வேளையிலே...
ஆடி மாத காத்தினிலே..
பவனி வந்து படுத்துகிறாய்.
பாவி நெஞ்சை கொளுத்துகிறாய்.
பனித்துளியை பார்த்து விட்டேன்
பாசி மனிக் கழுத்தினிலே...
மல்லிகை பூ இல்லையடி
உன் கூந்தல் மனம் அதிசயமே..!
ரோஜா பூ தோற்க்குமடி..
உன் இதழ் அழகை பார்த்த பின்னே..!
மயில் அழகு...மான் அழகு...
என் மரிக்கொழுந்தே நீ முதல் அழகு..!
மொழியதிலே என் தமிழ் அழகு.
அதை அலங்கரிக்கும் உன் பெயர் அழகு..
-------------------------------------------------------------------------------------
*****அன்னையை போற்றுவோம்*****
பொறுமையாய் எங்களை
பூமியில் ஈன்றவள்
பூமியில் ஈன்றமைப்
பூவாகக் காத்தவள்
வறுமையின் எதிர்ப்பிலும்
வளமாகக் காத்தவள்
வளமாகக் காத்தெம்மை
வாழ்வித்த தாயவள்
பெற்று முகர்ந்தவள்
பெருமையைக் கொண்டவள்
பேரிட்டுப் பூரித்து
பாராட்டி வளர்த்தவள்
கற்றுச் சிறந்திட
கதை பல சொன்னவள்
கண்கண்ட தெய்வமாம்
அன்னையைப் போற்றுவோம்
உதிரத்தை பாலாக்கி
உண்ணக் கொடுத்தவள்
அடுத்தவர் பசிக்குத்தன்
உணவையும் கொடுப்பவள்
அதிர்ந்து பேசாமலே
அன்போடு அணைப்பவள்
அகிலத்தில் தெய்வமாம்
அன்னையை போற்றுவோம்
-------------------------------------------------------------------------------------
*****தமிழ் உணர்வு*****
தமிழை மறப்பதோ
தமிழா - உன்
தரமின்று தாழ்வதோ
தமிழா
கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
கைகூப்பித் தொழுவது
தமிழன்றி வேறோ
தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
அடகுவைக்க
உன்
உயிரை வேண்டுமானால்
உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன்
தலையற்றுப் போனவனன்றோ
கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம்
செந்தமிழ் மறுப்பதோ
தமிழா
நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ
நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா
வார்த்தைகள் அவிழ்ந்து
உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும்
சுகந்தம் வீசுமே
அதற்காக
நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக
உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக
எந்த இசையிலும்
இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
நிஜமாய்க் கிசுகிசுக்குமே
அதற்காக
உள்ள உணர்வுகளை
அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
-------------------------------------------------------------------------------------
*****கன்னத்தில் முத்தம்*****
எனக்கு
கவிதையெல்லாம்
எழுத தெரியாதென்றபோது
கன்னத்தில்
அழுத்தமாய் ஆழமாய் அழகாய்
முத்தமிட்டு இப்போது
எழுதென்றாய்!
இப்போதும் சொல்கிறேன்
உன் இதழ் என் கன்னத்தில்
எழுதிய அளவுக்கு
எனக்கு கவிதை எழுத வராது!
-------------------------------------------------------------------------------------
*****நிச்சயமாக*****
காலத்தின் நேசிப்பை
நான் விரும்பவில்லை
அது என்னை விரும்புகிறேன்
என்றபோது;வெறுப்பு...
வாழ்வின் மேல் வந்த போது
காலத்தை நான் விரும்பினேன்
காலம், உனக்காக காத்திருக்கிறேன்.
பொறுத்திரு நான் வருவேன்
நிச்சயமாக என்றது காலம்.
-------------------------------------------------------------------------------------
*****என் பேனா*****
மை இல்லை எனினும்
உன் பெயரெனில்
எழுதும் என் பேனா.
இதயத்தில்
உன் நினைவுகள்...
கவிதைகள்
"என்னைப் பிடிக்கின்றதா?"
என் ஆயிரம் முறைக் கேள்வி
உன்னிடமிருந்ததில்லை
துடிக்கும் இமைகள்
மின்னல் போனதும்தூங்கப்போவது ஏன்?
கரைபற்றிக் கவலையில்லை
உன் காலடிச் சுவடுகளில் பதியும்
என்கால்கள்.
நொடிக்கு நொடி
நாடி பார்ப்பாயே
நான் சுவாசிக்கத்தானே?
நான் இறந்து
நீ இருந்த போதும்
என் பேனா எழுதும்.
-------------------------------------------------------------------------------------
*****ஏக்கம்*****
மழையில் ஒளிரும்
சிற்பங்கள்
தூறலில் அழியும்
ஓவியங்களுக்காய்
வருந்ததுவதில்லை.
உன்னைப் போலவே.
-------------------------------------------------------------------------------------
*****நினைவுப்பறவை*****
சிறகை விரித்தவுடன்
எத்தனை வண்ணப்பூக்கள்?
மலர்ந்து
வாடி
ஒதுங்கி.....
மீண்டும்
சிறகை விரிக்காதே
வாழ்க்கைக் காற்றில்
உன் சுவாசக் காற்றையும் கலந்து
என்னுடலில் பயணம் கொள்.
-------------------------------------------------------------------------------------
*****பெயரற்ற உறவு*****
கட்டிப் போடக் கற்றுள்ளாய்
கண்ணுக்குத் தெரியாத கயிறுகளால்.
முண்டியடித்து முன்வரும் சொற்களாலும்
காயம்படாமல் காப்பாற்றுவேன்
பெயரற்ற நம் உறவை.
-------------------------------------------------------------------------------------
*****பிரிவு*****
கையில் கொண்ட நீர்த்துளி
கணப்பொழுதில் நீராவியாய்
காணாமல் மறைந்ததோவென
கவலை வேண்டாம் தோழரே
காலம் கரைந்து மேகம் உரசி
மாரி நம்மை நனைத்து மகிழ்ந்திட
மாதங்கள் சில தொலைவில் தானே
மனம் வருந்தாதிருப்போம்
நீருக்கும் மழைக்கும் பிரிவு உண்டோ?
நமை இப்புவியில் பிரித்திட
எவருக்கும் சக்தி உண்டோ
-------------------------------------------------------------------------------------
*****உறவு*****
வழி பதித்த விழிகள்
உறக்கமிழந்து - பின்
பார்வை இழந்தும்...!!!
மனசுக்குள் பொத்தி வைத்திருந்த
உறவை பத்திரமாக
பூட்டி வைத்திருக்கிறேன்...!!!
மண்ணறை தீண்டும்
மரணம் வரை ......!!!!
-------------------------------------------------------------------------------------
*****சுகமன வலிகள்*****
காதல் வினோதமான
ஒரு உணர்வு-இல்லை
அதுகாலத்தின் தேவை
ஆண்டவனின்
நிர்ப்பந்தம்.....................
காதல் புணிதமானது-அது
உண்மை காதலாய்
இருந்தால்..........................
கண்கள் பேசத்தேவையில்லை
கைகள் கூடவேண்டியதில்லை
மனங்கள் ஒருமித்தால்.................
முகங்கள் தேவையில்லை
அறிமுகம் மட்டும் போதும்...................
உண்மைக்காதலின்
மொழி மெளனம் மட்டும்..................
அவள் புண்ணகைக்காய்
காத்திருக்க வேண்டியதில்லை............
ஆனால்
அவள் உள்ளத்திற்காய்
காத்திருப்பு நிச்சயம் இருக்கும்............
காதல் வலிகளும்
தளம்புகளும் தரும்-ஆனால்
அதுவும் சுகம்தான்...............................
காதலோடு பூமி-எங்களை
சுமக்க-நாம்
காதலோடு அவளை
சுமக்கின்றோம்...........................
காதல் காலத்தின்
கட்டாயம்-ஆனால் -அதன்
வலிகளும் வேதணைகளும்
அவள் தருவது...........................
பிரசவத்துக்கு முந்திய வலி
காதல் குழந்தையை-நாங்கள்
பிரசவிப்பதற்காய்-காதல்
வலிகளை சுமக்கின்றோம்............................
அது
சுகமன வலிகள்!!!!!!!!!!!!!!!
-------------------------------------------------------------------------------------
*****உண் ஞாபகம்*****
கதவு ஜன்னல்களை
இறுக மூடிவிட்டுத்தான்
கண்ணயர்ந்தேன்....................
அதையும் தாண்டி
உதைக்கின்றன
உண் ஞாபகங்கள்...............
உறங்காமல் நான்
உறங்கவிடமல் நீ...........................!!!!!!!!!!
*****தனிமை*****
எப்போதும் உன்னை எனக்குப் பிடிக்கும்
ஏனென்றால்...
தப்பாமல் வந்து
என்னைச் சந்தோசப்படுத்துபவன் நீ
எந்நாளும் என் மேல்
இரக்கப்படுபவனும் நீ
காதலன் எனச்சொல்லி
உன்னை களங்கப்படுத்தமாட்டேன்
ஆனாலும் உன்னோடு ஒட்டி இருப்பதனால்
'அரைலூஸ்' என்றும் என்னை
அழைப்பார்கள் வீட்டிலுள்ளோர்
உன் கையைப் பிடித்துத்தான்
நான் பல உணர்வகளோடு கலந்திருக்கிறேன்
இதுவரை அனுபவித்திராத பல
இன்பத்தையும்...துன்பத்தையும்...
நீ தான் எனக்குக் காட்சிப்படுத்தினாய்
என் முதல் தோழன்
தனிமையே நீ தானே....
-------------------------------------------------------------------------------------
*****பொய் அழகு*****
என் பெயர் அழகுற்றது
அதனை நீ உச்சரிப்பதால்
என்
புத்தகம் அழகுற்றது
உன் பெயரை தாங்கி
இருப்பதால்..
கவிக்கு பொய் அழகு
காதலுக்கும் பொய் அழகு
அழகுபடுத்திய பொய்யே
காதலை அழிவு படுத்தாமல்
இருக்கும் வரை பொய் கூட
அழகு தான் காதலில் ....
-------------------------------------------------------------------------------------
*****என்று மாறுமோ*****
மாண்ட மண்ணுக்குள்
மரணித்த மனிதர்கள்!
ஈன்ற தாயிடமே
இரவலான பிள்ளைகள்!
உறவுகள் இருந்தும் - உதவி
பெற முடியாத பேதைகள்!
விழிநீர் தீர்ந்து போயும்
விம்மியலும் விதவைகள்!
உண்பதட்குக் கூட உதவ முடியாத
ஊனமுற்ற கைகள்!
நீண்ட வரிசையிலே கஞ்சிக்காக நெடு நேரம்
நிட்கும் கூட்டத்திலே பங்கு
பெறமுடியாமட்போன கால்கள்!
இந்த நிலை என்று மாறுமோ?
-------------------------------------------------------------------------------------
*****ஒரு க(விதை)டிதம்*****
மௌனத்தையும்
முறைப்பையும் தவிர
வேறெந்த பதிலும்
தராத அன்பானவளக்கு...
விடை எதிர்பார்த்து
உடைந்த நெஞ்சுடன்,
எழுதும் கடிதம்...
ஏன் பதிலேதும்
இல்லை....?
உன் பதிலைக் கூட
பெற முடியாதவனாகிப்
போய்விட்டேனா நான் ?
அர்த்தம் இழந்த
வார்த்தைகளாக
எனது கவிதைகள்
என்னுள் மட்டும் பரவி
உயிரைத் துருவி
எழுத்துக்காளாகவே
வாழ்ந்த போதும்
அதை (நற்ப்புக்கு)or(காதலுக்கு) தான்
கொடுக்கிறோம்
என்கிற நினைவு ஒன்றே
என்னை இன்னும்
எழுத தூண்டுகிறது...
நண்பனை வளர்க்க
தன்னையும் அழிப்பான் (நண்பன்)or(காதகன்)
என்று எனக்கொரு மூடநம்பிக்கை...
எண்ணங்கள் வளர
எழுத்துக்கள் மிளிர
சின்னங்களாக
என் கவிதைகள்
உன்னை ஞாபகப்டுத்துகின்றன..
வாழ்க்கை நீரோட்டத்தில்
எல்லாம் மறந்து விடும்
என எல்லோரும்
சொன்னதை
ஏற்க முயன்று
பின் ஏமாந்தேன்..
நீ வாழும் உலகில்
நானும் இருக்கிறேன்
என்கிற ஒட்டி
மகிழ்ச்சியுடன்......
இப்படிக்கு,
தேயும் நிலவின்
வேதனை உணரந்திட
தானும் தேய்ந்திட விரும்பும்
மடத்தனமான மானிடன்,
உன் (நண்பன்)or(காதலன்)
-------------------------------------------------------------------------------------
*****என்றுதான் புரியும் உனக்கு*****
மை தீர்ந்துவிட்டது
பேனாவைக் கொடு
என்றபோது
‘போடா‘ என்று
பொடாவில் போடாத குறையாக
ஒரு பார்வை பார்த்தாய் !
காலையில்
செய்தித்தாள் தர
உன் வீட்டு கதவை தட்டியபோது
சாத்தினாய்
கதவை சட்டென்று !
நீ ஏறியப்போன
உன் பழைய
தாவாணியைக் கேட்ட போது
எரித்து விட்டாய்
தாவாணியை மட்டுமல்ல
என்னையும் கூட
உன் பார்வையால் !
பள்ளி வாசலில்
நோட்டீஸ் கொடுத்த
என்னிடம்
எடுத்துக்காட்டினாய்
செருப்பை
புகைக்கிறது என்னுள்ளம் !
அடி பெண்ணே
என்றுதான் புரியும் உனக்கு
நான் இவற்றை செய்தது
உன் இளமைக்காக அல்ல
என் வறுமைக்காக என்று !
-------------------------------------------------------------------------------------
*****உன் மனதில்*****
மறந்தேன் எம் கடந்த கால நினைவுகளை
நினைக்கவிலை நாம் விட்ட பிழைகளை
மன்னித்தேன் உன் குறைகளை
ஆனால்...........
மறக்க முடியவில்லை என் தவறுகளை
மன்னிக்க முடியவில்லை என் பிழைகளை....
மனதில் இன்னும் உனக்காக ஓரிடம்
உன் மனதில் யாரோ?????
-------------------------------------------------------------------------------------
*****அம்மா*****
உயிர்களின் முதல் வார்த்தை..
மனிதனின் முதல் கண்டுபிடிப்பு..
நாம் உணரும் முதல் ஸ்பரிசம்..
பாசத்தை கற்றுத்தரும் ஆன்மா..
நேசத்தில் வளர்க்கும் தோழி..
எதிர்ப்பார்ப்பே இல்லாத உயிர்..
என்றும் நம் "அம்மா" மட்டுமே...
-------------------------------------------------------------------------------------
*****உன்னோடு நான்*****
பல வேதனைகளுக்கு மத்தியில்
நான் வெதும்பிய போதெல்லாம்,
ஒரு கணமேனும் கலங்கியதில்லை..!
காரணம், எனக்குள் இருக்கும் நீ
என் கண்ணீராகக்கூட
கரைந்துவிட கூடாது என்பதற்காக..!!
சுவாசிக்க பிடிக்கிறது
என் சுவாசமே நீ என்பதால்..!
கவிதை எழுத பிடிக்கிறது
என் உணர்வுகளே நீ என்பதால்..!
இறந்தே விடுகின்றேன் ஒரு நிமிடம்
புன்னகையற்ற உன் முகத்தை
பார்க்கையில்..!!
அடிக்கடி இரத்ததானம் செய்கின்றேன்
என் இதயத்திற்கு.! காரணம்,
உன்னை பார்க்கும் வரை
உயிர் சுமந்து கொள்வதற்காக..!!
அன்றும் இன்றும் என்றும்
உன்னை நேசிப்பேன் எனும்போதுதான்,
இத்தனை பிரவாகம் எனக்குள்..!!!
இறைவன் இணைத்த உன்னத உறவு இது..!!
இறுதிவரை உறவாடும் உள்ளம் இது..!!
என்றென்றும் உன்னோடு நான்
-------------------------------------------------------------------------------------