அமெரிக்காவில் குடியேறிய முதல் இலங்கையர் மரணம்

இலங்கையில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு அகதியாக சென்று குடியேறிய ராஜா ரட்ணம், தமது 75வது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன
ராஜா ரட்ணம், கடந்த 1953ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது 19வது வயதில்;, அப்போது சிலோனாக இருந்து இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்று குடியேறினார். அதன் பின்னர், அமெரிக்க கடற்படையின் அதிகாரியாக சுமார் 10 வருடங்கள் சேவையாற்றியதன் பின்னர், ஓய்வு பெற்று அமெரிக்காவில் முதலாவது இலங்கை உணவு விடுதியை ஸ்தாபித்துள்ளர். அதன் பின்னர், அமெரிக்காவில் வெளியாகிய முதலாவது இலங்கை செய்தித் தாளையும் கலிபோர்னியா மாநிலத்தில் வைத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அமெரிக்கர் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்த அவர், ஆசிய பசுபிக் அமைப்பின் உபத்தலைவராகவும், இலங்கை சுற்றுலா மற்றும் காலாசார தகவல் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.